தேர்தல் நடத்தை விதிகளால் வணிகர்கள் பாதிக்கப்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தேர்தல் நடத்தை விதிகள் எனக்கூறி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வீதியில் இறங்கி போராடுவோம். வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் ஒரு கோடி வாக்காளர்கள் உள்ளனர். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கும் கட்சிக்கே எங்களின் ஆதரவு.
இதுகுறித்து வரும் 20-ம் தேதி அறிவிக்க உள்ளோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வணிகர்களைவிட பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago