 வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் - மாணவர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கல் :

By செய்திப்பிரிவு

வேலூர் புற்று மகரிஷி மருத்துவ சேவை மையம் மற்றும் வேலூர்வெங்கடேஸ்வரா பாலிடெக் னிக் கல்லூரி சார்பில் மாணவர் களுக்கான கபசுர குடிநீர் மற்றும் இலவச மூலிகை முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி  வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கல்லூரி தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் ஞானசேகரன் வரவேற்றார். வேலூர் சித்த மருத்துவர் பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மூலிகை முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீரை வழங்கினார்.

அப்போது சித்த மருத்துவர் பாஸ்கர் பேசும்போது, ‘‘கரோனா பெருந்தொற்று காலத்தில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் மக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, 3 லட்சம் பேருக்கு இலவச மூலிகை முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலை தடுக்க மாணவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். கல்லூரி மற்றும் பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள், பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். வெளியிடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றினால் கரோனா பரவலில் இருந்து தப்பிக்கலாம்’’என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்