லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்திருப்பூரில் நடைபெற்றது. மாவட்டதலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக டீசல் விலை உயர்வை குறைத்து, டீசல் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேல்வாகனங்களை கழித்து உபயோகமற்றதாக மாற்ற மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது. லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படு வார்கள் என்பதால், 20 ஆண்டுகளாக மாற்றி அமைக்க வேண்டும். வாகனங்களை கழித்து அழித்துவிட்டால் லாரி தொழில் நலிவடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
லாரி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சுங்க சாவடி முறைகேடுகளை சரி செய்ய வேண்டும். காலாவதியான சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும். நடைமுறையில் உள்ள வாடகையில் இருந்து லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
இந்த வாடகை உயர்வுக்கு பொதுமக்கள், வர்த்தக வியாபாரிகள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago