விருதுநகர் அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா செய் தனர்.
விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், வில்லிபுத்தூர் - விருதுநகர் சாலையில் கடந்த 3-ம் தேதி மறியல் செய்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டது.
நேற்று மீண்டும் டாஸ்மாக் கடையைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் பரவியது. டாஸ்மாக் கடை முன் திரண்ட பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த டாஸ்மாக் தனி வட்டாட்சியர் கண்ணன், கலால் தனி வட்டாட்சியர் கிருஷ்ணவேணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதிகாரிகளைப் பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கூடுதல் எஸ்.பி குத்தாலிங்கம், டி.எஸ்.பி அருணாசலம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் சிக்கியிருந்த அதிகாரிகளை பாதுகாப்பாக மீட்டு அனுப்பிவைத்தனர்.
டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago