ராமநாதபுரத்தில் ரூ.10.26 லட்சம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

தேர்தல் விதிமீறல் மற்றும் பணப்பரிமாற்றத்தைத் தடுக்க ஒவ்வொரு தொகுதியிலும், பறக்கும்படை குழுக்கள், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் முழு வதும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் கடந்த ஒரு வாரமாக நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.10.26 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

அரசு சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்தல், தனி யார் சுவர்களில் அனுமதி யின்றி நோட்டீஸ் ஒட்டுதல் உள்ளிட்டவை தொடர்பாக 3,080 பேரிடமிருந்து தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கள் வந்துள்ளன.

இது தவிர, கொடிக்கம்பம் அகற்றாதது, விதிமீறி பொருட்களை விநியோகம் செய் தது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்