வேலூரில் உள்ள நாராயணி மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டரில் வரும் 8-ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நாராயணி மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் இயங்கி வருகிறது. இங்கு, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான மருத்துவம், சிறுநீர், சர்க்கரை நோய் மற்றும் கண் மருத்துவ இலவச ஆலோசனை முகாம் வருகிற 8-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
கர்ப்பப்பை பிரச்சினைகள், மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை நீக்குதல், புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சைகள் குறித்து டாக்டர் சுஜாதா மேற்பார்வையில் முகாம் நடைபெறுகிறது. நீண்டநாள் ஆறாத காயம், கை, கால் மறுத்துப்போதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் குறித்து நீரிழிவு டாக்டர் சுபப்பிரியா மேற்பார்வையில் முகாம் நடைபெறுகிறது. இருமல், தும்மலின் போது சிறுநீர் கசிவு, அவசரம், கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் கசிவு, சிறுநீரில் கிருமி தொற்று, சிறுநீர் பை, கர்ப்பப்பை அடி இறங்குதல் பிரச்சினைகளுக்கு டாக்டர் சிவானந்தம் தலைமையில் முகாம் நடைபெறுகிறது.
கண்புரை கண்டறிதல், பார்வைகுறைவு, கண்ணில் நீர் வடிதல், கண்கள் சிவத்தல் பிரச்சினைகளுக்கு கண் அறுவை சிகிச்சை டாக்டர் ஷப்னம்சிங் தலைமையில் முகாம் நடைபெறுகிறது. கூடுதல் சிகிச்சை தேவைப்படும் 108 பேருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பில் புரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேமோ கிராம் கர்ப்பப்பை திசு பரிசோதனை, எலும்பு தேய்மானம் கண்டறிதல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முன்பதிவுக்கு 63854-10853, 73583-87143 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago