மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் எலாஸ்டிக் விலை 30 சதவீதம் உயர்வுபின்னலாடை உற்பத்தி சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டுகோள் :

By செய்திப்பிரிவு

திருப்பூரில் பின்னலாடைத் தொழில் பிரதானம். பின்னலாடைத் தயாரிப்புஅதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. முக்கிய மூலப்பொருளாக எலாஸ்டிக் இருந்து வருகிறது. பாலியஸ்டர், நைலான் நூல், ரப்பர், லைக்ரா ஆகியவை மிகவும் முக்கியம்.

இந்த எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். ரப்பர் விலை உயர்வு, தட்டுப்பாடு, இறக்குமதி செய்வதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 மாதங்களில் பாலியஸ்டர் நூல் 50 சதவீதமும் (ரூ.185-ல் இருந்து ரூ.270) , லைக்ரா 60 சதவீதமும் (ரூ.420-ல் இருந்து ரூ.670) உயர்ந்துள்ளது.

இதேபோல, மூலப்பொருட்களை முன்பணம் மற்றும் ரொக்கமாகவேகொள்முதல் செய்ய வேண்டியுள்ளதால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடனை குறைத்துக்கொள்ள வேண்டும். நிலுவைத் தொகையை விரைவாக வழங்க வேண்டும். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் விலை உயர்வு கட்டாயமாகிறது. இன்றுமுதல் (மார்ச் 5) எலாஸ்டிக்கின் விலை நடப்பு விலையில் இருந்து 30 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

இந்த விலை உயர்வுக்கு பின்னலாடை உற்பத்தி சங்கங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்