மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அஞ்சல் படிவங்கள் விநியோகம் :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நலத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நேற்று நடைபெற்றது.

விழிப்புணர்வு வாகன இயக்கத்தை ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து கூறும் போது, “மாவட்டத்தில் 5,429 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு, அஞ்சல் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்குமேற்பட்ட சுமார் 12,000 வாக்காளர்கள் உள்ளார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடிடையாக சென்றுஅஞ்சல் மூலமாக வாக்களிக்க இன்று முதல் படிவங்கள் வழங்கப்படுகின்றன.இந்தஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு‘பேட்ஜ்’ வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்களிக்கலாம்” என்றார்.மகளிர் திட்டஇயக்குநர் பாபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்