நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஆடை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ராயபுரத்தில் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

கரோனா பாதிப்பில் இருந்து தற்போதுதான் நிறுவனங்கள் மீண்டு வருகின்றன. இந்நிலையில் நூல் விலை உயர்வு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பின்னலாடைத் தொழிலும் பாதிக்கப்படுகிறது.

எனவே நூற்பாலைகள் நூல் விலையை குறைக்க வேண்டும். அடுத்த மாதமும் நூல் விலை குறையவில்லை என்றால், இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்.

மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜாப் ஒர்க் கட்டணங்கள் உயர்வால் தொழில்துறையினர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நூல் விலைஉயர்வால், ஆடைகளின் விலையும் உயர்வதால், பொது மக்கள் பாதிக்கப்படுவர். நூல் ஏற்றுமதிக்குதடை விதிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தேவைக்கு ஏற்ப நூல் விநியோகம் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நூல் விலை உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்