அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
தாலுகா தலைவர் அம்புஜம் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்ட துணைச் செயலாளர், கு.சரஸ்வதி ஆகியோர் பேசினர்.
ஊத்துக்குளி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளுக்கு குடிநீர் வசதி இல்லை. மருத்துவமனையில் நன் கொடையாக வழங்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைநோயாளிகள் பயன்படுத்தும் வகையில் வைத்து, அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். நோயாளிகளாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வருபவர்களையும், வெளிநோயாளிகளாக வருபவர்களையும் உள்நோயாளிகளாக அனுமதிக்காமல், வேண்டுமென்றே திருப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பிவிடுகிறார்கள்.
மேலும், பணி நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. இந்த சேவை குறைபாட்டை சரி செய்யவும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊத்துக்குளி பேரூராட்சி பகுதியில் ஆற்றுக்குடிநீர் விநியோகம் 10 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago