வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்த - கலை நிகழ்ச்சி, கோலம் மூலம் விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் காஞ்சி, செங்கை மாவட்டங்களில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள், ரங்கோலி கோலம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் செங்கை மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கலைக் குழுக்கள் மூலம் கரகாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியின் இறுதியாக பொதுமக்களுடன் இணைந்து உறுதி மொழியும் ஏற்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்கள் போடப்பட்டுள்ளன.

உத்திரமேரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில் அருகில் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலியை வரைந்தனர்.

இதை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பார்த்தனர். இதன் மூலம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற சிந்தனை மக்களுக்கு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்