விக்கிரவாண்டி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெய்சன் தலைமையிலான குழுவினர் நேற்று விழுப்புரம் அருகே பூத்தமேடு பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியி லிருந்து விழுப்புரம் வந்த அரசுப் பேருந்தைநிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
பேருந்தின் லக்கேஜ் கேரியரில் 2 பார்சல் இருந்ததை பிரித்து சோதனை செய்தனர். அது கஞ்சா என தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த நபரிடம் விசாரணை மேற்கோண்டனர். அவர், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புன்னவிலா வீடு பகுதியைச் சேர்ந்த பிரேம் (42)என்று தெரியவந்தது. அவர் திருப்பதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றதுதெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவையும், பிரேமையும் காணை போலீஸில் ஒப்படைத்தனர். காணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரேமை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago