திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யில் உள்ள பழமைவாய்ந்த ராஜகோபால சுவாமி கோயிலின் 18 நாள் பங்குனிப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, ராஜகோபால சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கருடச் சின்னம் பொறிக் கப்பட்ட கொடியை தீட்சிதர்கள் ஏற்றிவைத்து, உற்சவத்தை தொடங்கி வைத்தனர். கொடியேற்றத்தின்போது, சிறப்பு அலங் காரத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர், நேற்று இரவு கொடிச் சப்பரத்தில் பாமா, ருக்மணி சமேதரராக ராஜகோபால சுவாமி எழுந்தருளினார்.
தொடர்ந்து, 2-ம் நாளான இன்று(மார்ச் 5) புன்னை வாகனம், நாளை(மார்ச் 6) அம்ச வாகனம் உட்பட தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
உற்சவத்தின் முக்கிய திரு விழாவான கருடசேவை மார்ச் 15-ம் தேதியும், வெண்ணைத்தாழி திருவிழா மார்ச் 19-ம் தேதியும், தேரோட்டம் மார்ச் 20-ம் தேதியும் நடைபெற உள்ளன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், தீட்சிதர்களும் செய்து வருகின் றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago