வேலூர் மாவட்டத்தில் - 1,140 சுவர் விளம்பரங்கள் அழிப்பு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வரை யப்பட்டிருந்த 1,140 சுவர் விளம் பரங்கள் உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக அழிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியான பிப்.26 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத் தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் வரையப் பட்டுள்ள அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களை அழிக்க வும், சுவரொட்டிகள், டிஜிட்டல் பேனர்களை அகற்றவும் உத்தர விடப்பட்டது.

அதன்படி, வேலூர் மாவட் டத்தில் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு நகராட்சி, ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணியும், சுவரொட்டிகளை அகற்றுதல், அரசியல் கட்சிகளின் கொடிகளையும் அகற்றும் பணிகளும்முழு வீச்சில் விடிய, விடிய நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் இதுவரை 1,140 இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப் பட்டுள்ளன. 1,319 சுவரொட்டிகளும் 571 டிஜிட்டல் பேனர்களும் கொடிகளும் அகற்றப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மொத்தம் 3,460 பணிகளை செய்துள்ளனர். கிராமப் புறங்களில் அரசு கட்டிடங்களில் சுவர் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் கட்டிடங்களில் உரிமை யாளரின் அனுமதியுடன் விளம் பரம் செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சியினரின் தேர்தல் நடத்தை விதியை மீறிய செயல்பாடுகள் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.4.50 லட் சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக் கப்பட் டுள்ளது’’ என தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்