அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில், விடுபட்ட குட்டைகளை இணைக்க வேண்டும். அதற்கு நிதி ஒதுக்க அரசாணை வெளியிட வேண்டும் என அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழு கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைத்தது. இதை தமிழக அரசு ஏற்றது.
முதல்கட்டமாக அத்திக்கடவு- அவிநாசிதிட்டத்தில் விடுபட்ட குட்டைகளைபொதுப்பணித்துறை ஆய்வு செய்யும்பணியை தொடங்கியுள்ளது.திருப்பூர்வடக்கு ஒன்றியத்தில் உள்ள தொரவலூர், வள்ளிபுரம், ஈட்டிவீரம் பாளையம், மேற்குபதி, சொக்கனூர்,பட்டம் பாளையம்,பொங்கு பாளையம், கணக்கம்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய 9 ஊராட்சிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவிநாசி, நம்பியூர் மற்றும் பிற ஒன்றியங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago