நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர்அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் பறக்கும் படை குழுவினர்,நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் பல்வேறு குழுவினருடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளைமுழுமையாக பின்பற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘கறை நல்லது’ என்றலோகோவை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் செயல்முறைகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சிஅளிக்கப்பட்டது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின்மூலம் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளிலும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு குறும்படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட வருவாய் அலுவலர்எஸ்.நிர்மலா, உதகை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மோனிகாரானா, ரஞ்சித் சிங், ராஜ்குமார், பறக்கும் படை குழுவினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர், மண்டல அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago