நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு : அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

By செய்திப்பிரிவு

நீர்த் தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கோவில் வழியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளை நேற்று மக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் கோவில் வழி புதுப்பிள்ளையார் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் நீர்த் தேக்கத் தொட்டி கட்ட திட்டமிட்டு, கடந்த ஆண்டு பணிகளைத் தொடங்கினர்.பொதுமக்கள் எதிர்ப்பால், தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் நீர்த் தேக்கத் தொட்டி கட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வந்தனர். நேற்றும் அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

இதுதொடர்பாக மக்கள் கூறும்போது ‘‘எங்கள் பகுதியில் இரண்டு மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் உள்ளன. அதில் ஒரு தொட்டி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள காலி இடத்தில் நீர்த் தேக்கத் தொட்டி கட்டக்கூடாது’’ என்றனர். திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் சுப்பிரமணியம், செய்தியாளரிடம் கூறும்போது ‘‘கோவில்வழி கார்த்திக் நகரில் குடிநீர்த் தொட்டி கட்ட திட்டமிட்டிருந்தோம். அங்கு இடம் போதாததால், புதுப் பிள்ளையார் நகரில் குடிநீர்த் தொட்டி கட்டும் பணிகளை தொடங்கினோம், பொதுமக்கள் தடுத்ததால், பணிகளை நிறுத்தி உள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்