குளத்தில் மூழ்கி மாணவி உயிரிழப்பு: 3 பேர் மீட்பு :

By செய்திப்பிரிவு

விக்கிரவாண்டி அருகே ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகள் ஜீவிதா (14). இவர் விக்கிரவாண்டி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஜீவிதா தனது தோழிகள் கோமதி(11), நிவேதா (13), லட்சுமி பிரியா(12) ஆகியோருடன் நேற்று பிற்பகல்அப்பகுதியிலுள்ள குளத்திற்கு சென்றார். குளித்து கொண்டிருக் கும் போது எதிர்பாராத விதமாக 4 பேரும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றனர். நீரில் மூழ்கிய அவர்களால் வெளியே வர முடியா மல் கூச்சலிட்டனர். இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள் குளத்தில் குதித்து 4 பேரையும் மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த ஜீவிதாவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்தார். விக்கி ரவாண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்