மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் சோதனைச் சாவடியில், தேர்தல் நிலைக்குழு அலுவலரும், தனி வட்டாட்சியருமான முருகேசன் மற்றும் போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரில், கோவையைச் சேர்ந்த முருகேசன், அருள் ஆகியோர் கடைகளில் விற்பனை செய்வ தற்காக 327 பரிசுப் பெட்டிகளில் ரூ.8 லட்சம் மதிப்பிலான வெள்ளி யாலான விநாயகர், முருகன், வெங்கடாஜலபதி சுவாமி சிலை களை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால், 327 பரிசுப் பெட்டி களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, கரூர் மாவட்டம் க.பரமத்தி நொய்யல் சாலையில் முன்னூர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு எம்.முருகன் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தென்னிலையைச் சேர்ந்த வடிவேல், உரிய ஆவணங் கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.2,29,300-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் தீரன்நகர் ஆர்ச் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன் தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த பி.கே.அகரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் முத்துக்குமார் தலைமையிலான பறக்கும் படை யினர் நேற்று இரவு சோதனை நடத்தியபோது, திருச்சியைச் சேர்ந்த பி.தையாராம்(26), இ.மீட்டா ராம்(40) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1.22 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago