நெல் கொள்முதலில் ஊழல் முறைகேடுகளை கண்டித்து - தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தர்ணா :

By செய்திப்பிரிவு

நெல்கொள்முதலில் ஊழல் முறை கேடுகளை தடுத்து நிறுத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முன்வர வேண்டும் என வலியுறுத்தி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று மன்னார்குடியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மன்னார்குடியில் உள்ள தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலக நுழைவாயிலில். சங்க நிர்வாகிகளு டன் தர்ணாவில் ஈடுபட்ட அதன் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டி யனிடம், மன்னார்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுதொடர்பாக பி.ஆர்.பாண்டி யன் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி டெல்டாவில் தேவையான இடங்களில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு முக்கியத்துவம் தராமல், இடைத்தரகர்களின் நெல்லை கொள்முதல் செய்வதற்கே முக்கியத்துவம் தருகின்றனர். இதற்காக ஒரு மூட் டைக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை கையூட்டு பெற்று வருகின்றனர்.

இதனால், கிராமங்களில் விவ சாயிகளால் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் கொட்டி வைக்கப்பட்டு 10 முதல் 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்கிறது.

தேர்தல் அறிவித்த பிறகு மிகமோசமான நிலைக்கு நெல்கொள்முதல் பணி தள்ளப்பட்டுள் ளது. அதிகாரிகள், பணியாளர்கள் கூட்டு சேர்ந்து ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதி முறை அமலுக்கு வந்து, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு நிர்வாகம் செயல்பட்டு வரு கிறது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலையிட்டு, இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். உயர்நிலைக் குழுவை அனுப்பி வைத்து நேரடி கள ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்