சீரான குடிநீர் கோரி சாலை மறியலில் ஈடுபட முயற்சி

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டு பகுதியில் சீராக குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, "திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட சாமுண்டிபுரம், ஈ.பி.காலனி, முருங்கதோட்டம், ஏ.பி.நகர், சாமிநாதபுரம், நாகாத்தாள் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறோம். மேற்கண்ட பகுதிகளில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் விரயமாகி வந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தப்படவில்லை" என்றனர்.

முன்னதாக, பாஜக முன்னாள் கவுன்சிலர் நடராஜன் தலைமையில், பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

சம்பவ இடத்துக்கு மாநகராட்சி இளநிலை பொறியாளர் பிரபாகரன், குழாய் ஆய்வாளர் மொசுருதீன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், சாலை மறியல் முயற்சி கைவிடப்பட்டது. குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்