குடியிருப்பு பகுதியில் அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், "திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட வீரப்பசெட்டியார் நகர் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில், தனியார் நிறுவன அலைபேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அருகே தனியார் பள்ளி, விநாயகர் கோயில் மற்றும் குடியிருப்புகள் ஏராளமாக உள்ளதால், அலைபேசி கோபுரம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இருப்பினும் தொடர்ந்து பணி நடைபெற்று வந்ததால் அதிருப்தியடைந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, அலைபேசி கோபுரம் பணியை நிறுத்துவதுடன், வேறிடத்துக்கு மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
பட விளக்கம்
அலைபேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்த வீரப்பசெட்டியார் நகர் பகுதி பொதுமக்கள்.
படம்: இரா.கார்த்திகேயன்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago