கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் ஆட்சியருமான கிரண்குராலா தலைமையில் திருமண மண்டபம் மற்றும் நகை அடகுக்கடை உரிமை யாளர்கள் ஆகியோருக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் எந்த ஒரு திருமணம் மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளரும் வெளியூரிலிருந்து கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது.
திருமணம் மண்டபம் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்க அனுமதிகோரும் நபர்களிடம் உரிய அடையாள அட்டைகளை சரிபார்க்க வேண்டும். மேலும், ஆதார் அல்லது புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை களை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.
சுப நிகழ்வுகள் என்ற பெயரில் மக்களை கூட்டி பரிசுப் பொருட்கள் வழங்குவது, புடவை, வேட்டிகள் வழங்குவது, உணவு பொட்டலங்கள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நாள் 04.04.2021 அன்று வெளி மாநிலத்திலிருந்து தேர்தல் தொடர்பாக வந்து தங்கியிருப்பவர் களை விடுதியில் இருந்து வெளியேறச் செய்ய வேண்டும்.
ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங் களையோ, பட்டாசு பொருட்க ளையோ திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் வைக்க அனுமதிக்கக் கூடாது.இது தொடர்பாக தேவைப்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். பொதுக்கூட்டம், விழாக்கள்போன்ற நிகழ்வுகளின்போது வாக்காளர்க ளுக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளை கையாண்டு வருவதை எந்தஒரு நகைக்கடை உரிமையாளரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. மீறினால் மக்கள்பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக் குரிய குற்றமாகும்.
நகைகள் திருப்பப்படும் போதோ இது குறித்த விவரத்தை அருகில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். என்று அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தேர்தல் தனி வட்டாட்சியர் ஆர்.பாலசுப்பிரமணியம் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள், நகை அடகுக்கடை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago