வேலூர் ‘நறுவீ’ மருத்துவமனையில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

வேலூர் ‘நறுவீ ’ மருத்துவ மனையில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேலூர் ‘நறுவீ’ மருத்துவ மனையில் உலக மகளிர் தின விழா, இந்திய மருத்துவ சங்கம் வேலூர் கிளையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதனை, மருத்துவர்கள் பரணி, சுஜாதா, வசந்தி மற்றும் ‘நறுவீ’ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், சாலிஹா பால் ஹென்றி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். விழாவுக்கு இந்திய மருத்துவ சங்க வேலூர் கிளையின் தலைவர் டாக்டர் மதன் மோகன் தலைமை தாங்கினார். ‘நறுவீ’ மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி வரவேற்றார். ‘நறுவீ’ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் சிறப்புரை ஆற்றினார். இந்திய மருத்துவ சங்க வேலூர் கிளை செயலாளர் டாக்டர் நைலேஷ் நன்றி தெரிவித்தார்.

‘நறுவீ’ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் தலைவர் பேராசிரியர் அரவிந்தன் நாயர் ‘மார்பக புற்றநோய் கண்டுபிடித்தல்’ குறித்தும் டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ் ‘எளிதான சுவாசம் பெறுவது’ குறித்தும் விளக்கினர்.

நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற காவல் துறை கைரேகை நிபுணர் சாந்தகுமாரி, நடிகையும் ஆயுர்வேத மருத்துவருமான ரேச்சல் ரெபேகா ஆகியோரின் சேவையை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப் பட்டனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் ‘மிஷன் பிங்க் ஹெல்த்’ திட்டத்தின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் நர்மதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்