கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா பேசியது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 5,58,394 ஆண் வாக்காளர்களும், 5,55,371 பெண் வாக்காளர்களும், 211 இதர வாக்காளர்கள் என மொத்தம் 11,13,976 வாக்காளர்கள் உள்ளனர். 1,569 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆவ ணங்கள் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் எடுத்து செல்லக் கூடாது. தேர்தல் பொருட்கள், மதுபானங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் ஆகியவை ரூ.10,000 மதிப்புக்கு மேல் எடுத்து செல்லக் கூடாது.
இரவு 10 மணிக்கு பிறகு கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதி இல்லை. அரசு அலுவலக வளாகங்களில் சுவர் விளம்பரங்கள், பேனர்கள் கண்டிப்பாக வைத்தல் கூடாது.
குற்றப்பின்னணி உள்ள எவரையும் தேர்தல் பணிக்குழுக்களாக நியமித்தல் கூடாது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 04151-224155, 224156, 224157,224158 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறை களை அனைத்து அரசியல் கட்சியினரும் முழுமையாக பின்பற்றி தேர்தல் நல்ல முறையிலும், எவ்வித குழப்பங்கள் இல்லாமலும் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago