வேலூர் சரகத்தில் 133 உதவி ஆய்வாளர்களை பணியிட மாறுதல் செய்து டிஐஜி காமினி உத்தரவிட்டுள்ளார். உடனடியாக பணியில் சேர வேண்டும் என்ற உத்தரவால் உதவி ஆய்வாளர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சரகத்தில் 133 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து டிஐஜி காமினி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இருந்து 34 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 18 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 15 பேர் என மொத்தம் 67 காவல் உதவி ஆய்வாளர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 66 காவல் உதவி ஆய்வாளர்களில் 33 பேர் வேலூர் மாவட்டத்துக்கும், 18 பேர் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும் 15 பேர் திருப்பத்தூர் மாவட்டத் துக்கும் பணியிட மாறுதல் செய்யப் பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் இருந்து மொத்த பேரும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்திருப்பதுடன் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்ற உத்தரவால் உதவி ஆய்வாளர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இருப்பவர் களுக்கு ஏன் திருப்பத்தூரும் ராணிப்பேட்டையும் அண்டை மாவட்டம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளவர்கள். திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணியிட மாறுதல் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago