உடுமலை, தாராபுரம் தொகுதிகளுக்கான பறக்கும் படை அதிகாரிகள் நியமனம்

By செய்திப்பிரிவு

உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும்,ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தாராபுரம்: மூலனூர் துணை வேளாண் அலுவலர் எஸ்.செல்லமுத்து (9443055462), ஒன்றிய ஓவர்சியர் எம்.அனுசுயா (9159016597), தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வி.மோகனா (9894598701) ஆகியோர் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய 3 தனி, தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உடுமலை: குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரொனால்டு ஷெல்டன் (9843740911), வேளாண்பொறியியல் துறை உதவிப் பொறியாளர் ஆர்.குப்பமுத்து (9942565308), பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மனிஷா (9488275684).

மடத்துக்குளம்: தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள் திவ்யா(9500692640) , கோபி நாத் (63800 75956), குமரலிங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.முருகன் (9486690413) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பேற்றுக்கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலைமுதல் பணியில் ஈடுபட தொடங்கினர்.

இவர்கள், 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் 3 ஷிஃப்டுகள் மாறி, மாறி பணிபுரிவார்கள். பரிசு பொருள் விநியோகித்தல், பணம் விநியோகித்தல் என தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பறக்கும் படையினருக்கு மக்கள்தகவல் அளிக்கலாம். அதன்பேரில், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, இக்குழுவினர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

இதே மாவட்டத்திலுள்ள இதரசட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அதிகாரிகள், போலீஸார் அடங்கிய பறக்கும் படை குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்