திம்மராய சுவாமி கோயில் தேர்த் திருவிழா

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குடிசெட்லு கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததிம்மராய சுவாமி கோயிலில் தேர்த் திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. திருவிழாவில் முக்கிய நாளான நேற்று தேவி பூதேவி உடனுறை திம்மராய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.

மதியம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 80 அடி உயரமுள்ள தேரில் ரத உற்ஸவம் நடைபெற்றது. ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரில் பட்டாடைஉடுத்தி, ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் தேவி பூதேவிஉடனுறை திம்மராயசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்