கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழமை வாய்ந்த மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேர், கடந்த 17-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேரை இழுத்துச் செல்ல 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட துருப்பிடிக்காத சங்கிலி இணைக்கப்பட்டு இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா மார்ச் 28-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சுமார் 80 அடி உயரமுள்ள பெரிய தேர் மற்றும் சுமார் 65 அடி உயரமுள்ள சிறிய தேர் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தேர் கட்டும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago