ஓசூர் அடுத்த கக்கனூர் கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
தமிழக - கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள கக்கனூர் கிராமத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. திருவிழாவை காண 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வை யாளர்கள் திரண்டிருந்தனர்.
இந்நிலையில் எருது விடுவது தொடர்பாக ஏற்பட்ட வாய் தகராறு முற்றி, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதை தடுப்பதற்காக பாகலூர் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது நடந்த கல்வீச்சில் பாகலூர் காவல் நிலைய ஆய்வாளர் பழனிசாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காவல் வாகனத்தில் அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago