அதிக தொகை எடுத்துச் செல்வோர் தொடர்பான தகவலை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் பறக்கும் படையினருக்கு தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு

By செய்திப்பிரிவு

அதிக அளவில் பணம் எடுத்துச் செல்வோர் குறித்த தகவலை, தேர்தல் ஆணைய விதிகளின் படி உடனடியாக வருமான வரித்துறைக்கு பறக்கும் படையினர் தகவல் அளிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கார்த்திகா தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பல்வேறு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கார்த்திகா தலைமை வகித்து பேசியது:

தருமபுரி மாவட்ட அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள், அரசு விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்கள், சாலை மேம்பாலங்கள், பொது இடங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தலை கண்காணிக்க பறக்கும்படை குழுக்கள், நிலை யான கண் காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்டு, போதிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். நாளிதழ்கள், வாட்ஸ் அப் மற்றும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் அனு மதி இன்றி வரும் விளம்பரங்கள் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவால் கண் காணிக்கப்பட்டு தேர்தல் செலவினங்களில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பதற்றம், மிக பதற்றம் மிக்க வாக்குச் சாவடிகளில் அமைதியாக தேர்தல் நடத்த காவல்துறை அலுவலர்கள் சிறப்பாக செயலாற்ற வேண்டும். அதிக அளவில் பணம் எடுத்துச் செல்வோர் குறித்த தகவலை, தேர்தல் ஆணைய விதிகளின்படி உடனடியாக வருமான வரித்துறைக்கு பறக்கும் படையினர் தகவல் அளிக்க வேண்டும். அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலை சிறப்பாக நடத்திட பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

முன்னதாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இணையவழி பதிவுகள் மற்றும் செயலிகள் குறித்து தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு மாவட்ட தேசிய தகவலியல் மைய அலுவலர் ரகுபதி பயிற்சி வழங்கினார்.

கூட்டத்தில், காவல் கண் காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்கள் ராமமூர்த்தி, ரஹமத்துல்லா கான், தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்