தமிழக அரசுப் பணியில் 100% தமிழர்களுக்கு வழங்க வேண்டும் தவாக மாநாட்டில் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மாநில அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என சேலத்தில் நடந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் ஓமலூரில் நடந்த அக்கட்சி மாநாட்டுக்கு கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் ஜெயமோகன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தாரை.செந்தில்குமார், தலைமை நிலைய செயலாளர் கண்ணன், மாவட்டத் தலைவர்கள் மோகன்ராஜ், ஐயப்பன், யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகத்தில் மத்திய அரசு மற்றும் தனியார்துறை பணிகளில் 90 சதவீதமும், தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும். இதனை நிறைவேற்றும் வகையில், வேலை உறுதிச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்றுத் தரப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழக மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் அமைத்து, அவர்களின் பாதுகாப் பினை உறுதி செய்திட வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்