செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளின தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களிடம் தேர்தல் விதிமிறல்கள் தொடர்பாக புகார்களை அளிக்கலாம் என தெரிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர் என மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன.
இதில் பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதிக்கு செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஏ.லதா (செல்போன் எண்: 9500959938).
தாம்பரம் தொகுதிக்கு தாம்பரம் கோட்டாட்சியர் டி.ரவிச்சந்திரன் (9384094738).
மதுராந்தகம் தொகுதிக்கு மதுராந்தகம் கோட்டாட்சியர் எஸ்.லட்சுமி பிரியா (9445000415).
செங்கல்பட்டு தொகுதிக்கு செங்கல்பட்டு கோட்டாட்சியர் சுரேஷ் (9445000414).
திருப்போரூர் தொகுதிக்கு செங்கல்பட்டு ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) டி.சுப்பிரமணியன் (8903508515).
செய்யூர் தொகுதிக்கு செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வி.எம்.சீதா (8056718471).
சோழிங்கநல்லூர் தொகுதிக்கு செங்கல்பட்டு உதவி ஆணையர் (கலால்) ஏ.லட்சுமணன் (9443641475) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் அந்தந்த தொகுதிகளில் நடக்கும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் புகார் தெரிவிக்கலாம். தேர்தல் முடியும் வரை அதிகாரிகள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் தேர்தலை நடத்துவதுடன், கண்காணிப்பு பணியையும் மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அவரவர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் எண்களில் தெரிவிக்கலாம். அதேபோல் அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தும் அலுவலரை தொடர்பு கொண்டு குறை, புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago