காஞ்சியில் தேர்தல் விழிப்புணர்வு, பயிற்சிக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கல்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர்(தனி) ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 3,304 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,431 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள், 2,518 விவிபாட் கருவிகள் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள்வது தொடர்பான பயிற்சி வகுப்புகள் மற்றும் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதில், பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் பயன்படுத்தப்பட உள்ள மொத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5% சதவீத இயந்திரங்கள், மேற்கண்ட பயிற்சி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா 5% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் தேர்தல் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்