திருத்தணி அருகே உள்ள நாரணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி(45). இவர் திருத்தணி, சென்னை பை-பாஸ் சாலையில் டிராக்டர் பழுதுபார்ப்பு மையத்தை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலையில் டிராக்டர் பழுதுபார்ப்பு மையத்தின் ஒரு பகுதி மின்கசிவால் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியந்தது.
திருத்தணி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், டிராக்டர் பழுதுபார்ப்பு மையம் முற்றிலும் தீக்கிரையானதோடு அருகில் உள்ள மற்றொரு டிராக்டர் பழுதுபார்ப்பு மையத்தின் ஒரு பகுதியும் தீயால் சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள், பொருட்கள் தீக்கிரையாகின.
திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago