திடீர் உயர் மின் அழுத்தத்தினால் வீடுகளில் மின்சாதன பொருட்கள் புதுச்சேரியில் பழுதடைந்து மக்கள் தவிக்கின்றனர்.
புதுவை உப்பளம் ரயில் நிலையம் அருகே உள்ள இருதய ஆண்டவர் பசிலிக்கா அருகே பாண்டியன் சந்து என்ற இடம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே மின் அழுத்த பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென மின்னழுத்தம் அதிகமானது. இதனால் அப்பகுதியில் இருந்த சில வீடுகளில் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் எந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுத டைந்தன.
இதனால் அப்பகுதி மக்கள் இப்பொருட்களை பழுது நீக்கவோ, புதிதாகவோ வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு தவிக்கின்றனர். உடனே மின்துறை அதிகாரிகள் இதுகுறித்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago