புதுச்சேரியில் 645 லிட்டர் சாராயம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி கலால் துறை ஆணையர் அபிஜித் விஜய் சவுதிரி, துணை ஆணையர் சுதாகர், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் கலால்துறையினர் நேற்றுமுன்தினம் இரவு சாராயக் கடைகளில் ஆய்வு மேற்கொண் டனர். அப்போது கலால் சட்டம்மற்றும் கலால் விதிகளுக்கு முரணாக சாராய விற்பனை செய்தசாராயக்கடைகளில் இருந்து 645 லிட்டர் (3,583 பாக்கெட்டுகள்) சாராயம் பறிமுதல் செய்யப் பட்டது. பின்னர் இவை அனைத்தும் கலால்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.

இதேபோல் கடந்த இருதினங்களுக்கு முன்பு சேதராப் பட்டு சாராயக் கடையில் 51 லிட்டர் சாராயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்