புதுச்சேரியில் 3-ம் கட்டமாக மூத்த குடிமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இதற்காக 70,000 டோஸ் மருந்து தயார் நிலையில் உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் கரோனா தாக் கம் குறைந்துள்ள போதிலும், நாள்தோறும் 10 முதல் 20 பேர் வரை தொற்று பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர். இதனால் சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகி றது.
இதனிடையே புதுச்சேரியில் முதற்கட்டமாக ஜனவரி 16-ம்தேதி முதல் சுகாதாரப் பணி யாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளர்க ளுக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 10,329 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3-ம் கட்டமாக 60 வயதுக்கு மேல் மற்றும் 45 வயதுக்கு மேல் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மூத்த குடிமக்கள், தடுப்பூசி போடும் மையங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று முதல் மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், ‘‘புதுச்சேரியில் கோவிஷீல்டு என்ற கரோனா தடுப்பூசி போடுவதில் 50 சதவீ தத்தை நெருங்கியுள்ளோம். மேலும்,கரோனா தடுப்பூசி போடுவதற்காக முன்களப் பணியாளர்கள் 8,500 பேர் பதிவு செய்துள்ளனர்.
3-ம் கட்டமாக 60 வயதுக்கு மேல் மற்றும் 45 வயதுக்கு மேல்நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, இருதய நோய், கடுமையான சளி, இருமல் உள்ளவர்களுக்கு இன்று (மார்ச் 1) முதல் கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒருவருக்கு ஒரு டோஸ் வீதம் 70 ஆயிரம் டோஸ் மருந்துகள் தயார் நிலை யில் உள்ளது.
மேலும், தடுப்பூசி போடுவதற் காக கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, மார்பக மருத்து வமனை, மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி உட்பட 13 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு சென்று பெயரை பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வயது சான்றிதழாக ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்கலாம். 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வயது சான்றிதழாக ஆதார்டு அல்லது அடையாள அட்டை மற்றும் நோய் பாதிப்பு இருப்பதற்கான சான்றிதழை மருத்துவரிடம் பெற்று வந்தால் தடுப்பூசி போடப்படும். ஒரு மையத்தில் 100 பேர் வீதம் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். தேவைப்பட்டால் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago