திருவாரூர் விஜயபுரம் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களை மாற்றுப் பணிக்கு அனுப்புவதை ரத்து செய்ய கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருவாரூர் விஜயபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களை மாற்றுப் பணி மூலம் இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர் வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மையம் வலி யுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அந்த அமைப் பின் பொதுச் செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவாரூர் விஜயபுரத்தில் 50 ஆண்டுகள் பழமையான அரசு தாய்சேய் நல மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை மூலம் தினந்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவ மனையில் 6 பெண் மருத்துவர் களும், 1 மயக்கவியல் மருத்துவ நிபுணரும் பணியில் உள்ளனர். ஆனால், கடந்த 5 மாதங்களாக 2 பெண் மருத்துவர்கள் மட்டுமே மருத்துவமனையில் நிரந்தரமாக உள்ளனர். மற்ற 4 பெண் மருத்துவர்கள், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு தாலுகா மருத்துவமனைகளுக்கு மாற்றுப்பணி அடிப்படையில் அனுப்பப்பட்டு பணிபுரிந்து வரு கின்றனர்.

இதனால், கர்ப்பிணிகளும், குழந்தைகளும் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். தற்போது, பணியில் உள்ள 2 மருத்துவர்களைக் கொண்டுதான் முழுநேரமும் சிகிச்சை அளிக்கப்படுவதால், அவர்களும் பணிச்சுமையால் திணறி வருகின்றனர்.

எனவே, திருவாரூர் விஜய புரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களை மாற்றுப் பணி மூலம் இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்