ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 40 வயதுக்கு மேல் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்குகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவியது. இதனால், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. நோய் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியவுடன் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசியை மத்திய சுகாதாரத்துறை அறிமுகப் படுத்தியது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு கரோனா தடுப்பூசி போடும் முகாம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
முதற் கட்டமாக கரோனா தொற்று தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணி யாளர்களுக்கு கரோனா தடுப்பூசிபோடும் முகாம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள், வருவாய் மற்றும் காவல் துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப் பட்டு வந்தன.
இந்நிலையில், பொதுமக்களுக் கும் கரோனா தடுப்பூசி வழங்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்தது. இதையொட்டி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் அதற்கு இணை நோயான சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் இதர நாள் பட்ட நோய் தாக்கம் உள்ளவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம், புதுப்பேட்டை சமுதாய சுகாதார நிலையம் மற்றும் சந்தை கோடியூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 40 வயதுக்கு மேல் உள்ளவர் மற்றும் இணை நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு இன்று கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை கொண்டு வந்து பதிவு செய்து கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்றும், இதற்கு கட்டணம் ஏதும் இல்லை என திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர்.
இதேபோல, வேலூரிலும் இன்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை, பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, திருவலம், கல்லப்பாடி, ஒடுக்கத் தூர், டி.டி.மோட்டூர், ஊசூர், வடுகன்தாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சத்துவாச்சாரி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விருப்பமுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம் என வேலூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதேபோல ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இன்று கரோனா தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago