வேலூரில் பயிற்சி பெற்ற காவலர்கள் 19 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

By செய்திப்பிரிவு

காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சிப்பெற்ற காவலர்கள் 19 ஆண்டுகள் கழித்து நேற்று வேலூரில் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண் டனர்.

வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 2002-ம் ஆண்டு பயிற்சி பெற்ற 292 காவலர்கள் தற்போது பல்வேறு மாவட்டங்களில் காவல் ஆய்வா ளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், தலைமை காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

பயிற்சி பள்ளியில் சந்திப்பு

இவர்கள், தமிழக காவல் துறையில் சேர்ந்து 19 ஆண்டுகள் நிறைவு ஆனதை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு காவலர் பயிற்சி பள்ளியின் ஆய்வாளர் கனிமொழி தலைமை வகித்தார். உதவி காவல் ஆய்வாளர்கள் சிவசங்கரன், பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, காவல் ஆய்வாளர் ஜெயவேலு வரவேற்றார்.

நினைவுகள் பகிர்வு...

இதைத்தொடர்ந்து, 292 காவலர்கள் தங்களது பயிற்சி காலத்தில் நிகழ்ந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். காவலர்கள் தாங்கள் பயிற்சி பெற்ற இடம், தங்கியிருந்த இடத்தை ஆர் வத்துடன் பார்த்தனர். பிறகு, ஒருவரையொருவர் நலம் விசாரித்து, குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டறிந்து மகிழ்ச்சிய டைந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் காவலர் கள் பயிற்சி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்