தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தினம் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப் பட்டது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல்இயக்கத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் அமுதா தலைமை வகித்தார்.
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட சர்.சி.வி.ராமன் அறிவியல் ஆராய்ச்சிக்கூடத்தை திறந்து வைத்தார்.
சிறிய அளவிலான செயற்கைக்கோளை தயாரித்த பள்ளி மாணவர்கள் தேவேந்திரன், கவுதம் மற்றும் வழிகாட்டு ஆசிரியர் கோட்டீஸ்வரி, பட்டதாரி ஆசிரியர் காந்த், உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் முனிசாமி, பொருளாளர் ஜோசப்அன்னையா, துணைத்தலைவர் விசுவநாதன், ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயம் வழங்கப்பட்டது. முடிவில், பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago