ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தப் போராட்டம் நேற்று மாலை வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் கோவை சுங்கம் பணிமனையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தொழிற்சங்க மூத்த தலைவர்கள், அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், சிஐடியு, எல்பிஎப் தொழிற்சங்க நிர்வாகிகள் 4 பேர் இடமாறுதல் செய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து சுங்கம் பணிமனை முன்பு நேற்று தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தொழிலாளர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
சிஐடியு பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி ராஜ் கூறும்போது, "தண்டனை அடிப்படையில் கட்டாய இடமாறுதல் கொடுத்துள்ளார்கள். உடனடியாக பணி மாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago