தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார் டைல்ஸ் நிறுவனத்தில், வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த டைல்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம், கோவை அருகேயுள்ள வெள்ளக்கிணறு திருவள்ளுவர் வீதியில் உள்ளது. இதற்கு அருகே குடோனும் உள்ளது. இந்த அலுவலகம் மற்றும் குடோனில் துணை ஆணையர் தலைமையில், 4 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் காலை 9 மணி முதல் இரவு வரை சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு ஆவணங்களையும் வருமான வரித் துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago