பட்டுக்கூடு விலை திருப்தியால் விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

பட்டுக்கூடு விலை திருப்திகரமாக இருப்பதால், பட்டுக்கூடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், 2,000-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் மல்பரி நடவு செய்து பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள் சேலம், திண்டுக்கல், தருமபுரி, கோவை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

சேலம் அணைமேடு அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று முன்தினம் பட்டுக்கூடு கிலோ அதிகபட்ச விலையாக ரூ.470-க்கும், குறைந்தபட்சம் ரூ.427-க்கும், சராசரியாக ரூ.320-க்கும் விற்பனையானது. நேற்று அதிகபட்ச விலையாக ரூ.455, குறைந்தபட்சம் ரூ.300, சராசரியாக ரூ.385-க்கும் ஏலம் போனது. திருப்தியான விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “கரோனா தொற்று காலத்தில் பட்டு வளர்ப்பு தொழில் முழுவதும் முடங்கியது. தற்போது, பட்டுக்கூடு தேவை அதிகரித்துள்ள நிலையில், விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

வரும் காலங்களிலும் மேலும் விலை உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. பட்டுக்கூடு உற்பத்தியை கைவிட்ட விவசாயிகள் மீண்டும் உற்பத்தியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்