மார்ச் 15-ம் தேதி முதல் சேலம்-விருத்தாசலம் சிறப்பு ரயில் இயக்கம்

By செய்திப்பிரிவு

சேலம்-விருத்தாசலம் சிறப்பு பயணிகள் ரயில் மார்ச் 15-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில் சேவை, பேருந்து சேவை உள்ளிட்டவை நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கமான ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரயில், முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக வரும் 15-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

இதன்படி, விருத்தாசலம்- சேலம் (எண்-06121) ரயில் விருத்தாசலத்தில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு, சேலத்துக்கு காலை 9.05 மணிக்கு வந்தடையும். ஞாயிறு தவிர, வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் சேலம்- விருத்தாசலம் (எண்-06122), சேலத்தில் மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, விருத்தாசலத்துக்கு இரவு 9 மணிக்கு சென்றடையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்