செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 வாக்கு எண்ணும் மையங்கள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் மார்ச் 12-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடக்கிறது.

செங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

வாக்குச்சாவடிகளில் உள்ளவசதி, பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மற்றும் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுவது குறித்து அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், சோழிங்க நல்லூர், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர் என மொத்தம் 7 தொகுதிகள் அடங்குகின்றன.

இதில் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்குகள் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய தொகுதிகளுக்கான தண்டரையில் உள்ளஆசான் நினைவு பொறியியல்கல்லூரியிலும், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகளுக்கான வாக்குகள் மதுராந்தகத்தை அடுத்த நெல்வாய் கூட்ரோட்டில் உள்ள ஏசிடி பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்