காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தின் 10-ம் நாள் உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த உற்சவத்தையொட்டி அம்மன் செண்பகப்பூ, மகிழம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் தினந்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் காலை மாலை இருவேளையும் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
அந்த வகையில் நேற்று 10-ம்நாள் உற்வசமாக செண்பக் பூ, மகிழம்பூ, மனோரஞ்சிதம், மல்லி உள்ளிட்ட மாலைகள் அணிந்து எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏகாம்பரநாதர் கோயிலில்..
இதேபோல் மாசி மகத்தையொட்டி ஏகாம்பரநாதர், ஏழவார் குழலியுடன் காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள அமரேஸ்வரர் கோயிலில் மண்டகப்படி கண்டருளினார். இதனையொட்டி உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நூற்றுக் கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago