பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 7 சிறப்பு குழுக்கள் அமைப்பு

By செய்திப்பிரிவு

பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை ஆய்வுசெய்ய வட்டாட்சியர்கள் தலைமையில் 7 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சிவகாசி தனி வட்டாட்சியர் ராஜ்குமார் தலை மையில், விருதுநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன், சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநர் வேலுமணி, மாரனேறி சிறப்பு எஸ்.ஐ மாரியப்பன், வில்லிபுத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் டோமினிக் ஆகியோர் கொண்ட குழுவினர் சிவகாசி வட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வுகளை மேற்கொள்வர்.

அருப்புக்கோட்டை தனி வட் டாட்சியர் ரவீந்திரன்ஞானராஜ் தலைமையில் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி, சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு துணை இயக்குநர் சுதாகர், சிவகாசி கிழக்கு சிறப்பு எஸ்.ஐ. குமாரவேல், சிவகாசி தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் ரேவதி ஆகியோர் சிவகாசி மற்றும் வில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வுகளை மேற்கொள்வர்.

காரியாபட்டி தனி வட்டாட்சியர் செந்தில்வேல் தலைமையில் வில்லிபுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரகுருசாமி, சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு உதவி இயக்குநர் சிவக்குமார், சிவகாசி போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ மாரிமுத்து, சிவகாசி தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் முத்து ஆகியோர் சிவகாசி மற்றும் வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்வர்.

வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் ரெங்கசாமி தலைமை யிலான குழு வெம்பக்கோட்டை வட்டத்தில் ஆய்வு மேற்கொள்வர்.

அதேபோன்று, வெம்பக்கோட்டை வட்டத்தில் ராஜபாளையம் தனி வட்டாட்சியர் ரெங்கநாதன் தலைமையிலான குழு ஆய்வு செய்யும்.

விருதுநகர் வட்டத்தில் தனி வட்டாட்சியர் ரமணன் தலைமையில் விருதுநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன், தொழிலகப் பாதுகாப்பு துணை இயக்குநர் சித்ரா, ஆமத்தூர் சிறப்பு எஸ்.ஐ தீனதயாளன் ஆகியோர் ஆய்வு செய்வர்.

சாத்தூர் மற்றும் அருப்புக் கோட்டை வட்டத்தில் வத்திராயிருப்பு தனி வட்டாட்சியர் செய்யது இப்ராகிம் தலைமையில் சாத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார், விருதுநகர் தொழிலகப் பாதுகாப்பு உதவி இயக்குநர் வெங்கடேசன், ஏழாயிரம்பண்ணை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்புராஜ், அருப்புக்கோட்டை தொழி லாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வுகளை மேற் கொள்வர்.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்