வேலூர் மாவட்டத்திலிருந்து வேனில் சுற்றுலா சென்ற 15 பேர், நாகூர், வேளாங்கண்ணி பகுதிகளுக்கு சென்றுவிட்டு, நேற்று காரைக்காலுக்கு சென்றுகொண்டிருந்தனர். திருமலை ராயன் பட்டினம் அருகே போலகம் பகுதியை கடந்தபோது, முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற நாகை பொய்கைநல்லுாரைச் சேர்ந்த தேன்மொழி, கோமதி ஆகியோர் சாலையில் விழுந்தனர். இவர்கள் மீது ஏறாமல் இருப்பதற்காக வேனை ஓட்டுநர் திருப்பியபோது, அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி வேன் சாய்ந்தது. இதில், ஓட்டுநர் ஜான்பீட்டர், சிறார்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
திருமலைராயன்பட்டினம் போக்குவரத்து போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு, காரைக்கால் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்த னர். பலத்த காயமடைந்த தேன் மொழி தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago